60 அடி உயர பாலத்தின் அருகில் தடம்புரண்ட கொழும்பு – பதுளை ரயில்!!

468

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில்  ஹட்டன் – கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 60 அடி பாலத்துக்கு அருகில் தடம்புரண்டது, விபத்தின்போது மூவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன் – கொட்டகலைக்கு இடையில் தடம்புரண்டுள்ள மூன்று ரயில் பெட்டிகளை தண்டாவளத்தில் உரிய முறையில் சீராக நிறுத்துவதற்கு சுமார் 2 வாரங்களாகும் என ரயில் மார்க்க பராமரிப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தபால் ரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில்  ஹட்டன் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 60 அடி பாலத்துக்கு அருகில் தடம்புரண்டது, விபத்தின்போது மூவர் காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டாளத்தில் நிறுத்துவதற்கு பாரம்தூக்கி இயந்திரமொன்றை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விபத்தினால் சிதைவடைந்துள்ள பாலத்தை சீர்செய்ததன் பின்னரே பாரம் தூக்கி இயந்திரத்தை கொண்டு சென்று ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 150 வருடத்துக்கும் பழைமையான இந்த பாலத்தை சீர் செய்வதற்காக இது போன்றை இரும்புகளை தேடிக்கொள்வதில் சிக்கல் நிலவுவதாகவும் ரயில்வே பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தினால் சிதைவடைந்துள்ள 1 கிலோமீற்றர் தூரம் வரையான ரயில் பாதை இருவாரங்களுக்கு சீர் செய்யப்படும் எனவும் அதுவரையில் கொழும்பிலிருந்து செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்துடனும் பதுளையிலிருந்து வரும் ரயில்கள் கொட்டகலை ரயில் நிலையத்துடனும் மட்டுப்படுத்தப்படும்.

இந்த ரயில்களில் வரும் பயணிகளுக்காக ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் பஸ் சேவையொன்றை ஈடுபடுத்த ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் இரவு எட்டு மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த தபால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.