ஒரு மணி நேரத்தில் 2200 புஷ் அப்ஸ் : 52 வயது தொழிலாளியின் சாதனை!!

433


பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் கார்ல்டன் வில்லியம்ஸ்(வயது52). கட்டுமானத் தொழிலாளியான இவர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். குறிப்பாக புஷ் அப் எடுப்பதில் வல்லவர்.

தீவிர பயிற்சி எடுத்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 2220 புஷ் அப்ஸ் எடுத்து உலக சாதனை படைத்திருந்தார்.இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காத நிலையில், வில்லியம்ஸ் தனது சாதனையை தானே முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளார்.ஆஸ்திரேலியாவில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


கின்னஸ் அதிகாரி முன்னிலையில், புஷ் அப்ஸ் எடுக்கத் தொடங்கிய வில்லியம்ஸ், ஒரு மணி நேரத்தில் 2682 புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்தார்.

இடையிடையே மூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோதும்கூட, கடிகாரம் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.