பந்தை எறிகிறார் போத்தா : அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!!

333

Botha

பந்தை எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் ஆபிரிக்க வீரர் ஜோகன் போத்தா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்.

சுழற்பந்து வீச்சாளர்களை கண்டால் அவுஸ்திரேலியாவுக்கு எப்போதும் சிக்கல் தான். இலங்கை சுழல் ஜம்பவான் முரளிதரன் பந்தை எறிவதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா 1996ல் குற்றம் சுமத்தியது. அவுஸ்திரேலியாவில் நடந்த சோதனைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.

இப்போது தென் ஆபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜோகன் போத்தா(31) மீது சி.ஏ குற்றம் சுமத்தியுள்ளது. 5 டெஸ்ட், 78 ஒருநாள், 40 T20 போட்டிகளில் விளையாடியுள்ள போத்தா மீது, பந்தை எறிவதாக முதன்முதலில் 2006ல் (சிட்னி டெஸ்ட்) சி.ஏ., புகார் தெரிவித்தது.

அப்போது, சர்வதேச கிரிக்கெட் சபை போத்தாவுக்கு தடை விதித்தது. இதில் இருந்து மீண்ட இவர் 2009ல் அவுஸ்திரேலியாவுக்கெதிராக ஒருநாள் போட்டியில் பங்கேற்ற போது மீண்டும் இதே சர்ச்சையை சி.ஏ கிளப்பியது.

தற்போது அவுஸ்திரேலியாவின் உள்ளூர் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் போத்தா தெற்கு அவுஸ்திரேலியா அணியின் அணித்தலைவராக உள்ளார். இப்போட்டிகளில் போத்தா பந்தை எறிவதாக சி.ஏ. மூன்றாவது முறையாக குற்றம் சுமத்தியது.

எந்த போட்டியில் இப்படிச் செய்தார் என்று சரியாக கூறவில்லை.
எனினும், மூன்று நடுவர்கள் சந்தேகம் தெரிவித்ததன் அடிப்படையில் போத்தாவுக்கு சோதனை நடத்தப்படவுள்ளது.

இந்த புகார் காரணமாக போத்தாவுக்கு உடனடியாக தடை விதிக்கப்படவில்லை. ஒருவேளை சோதனையில் பந்தை எறிவது நிரூபிக்கப்பட்டால் தடையை சந்திக்க நேரிடும்.