தமிழ்நாட்டில் நண்பர்களின் விளையாட்டுத்தனம் விபரீதமாக மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை, அம்பத்தூர் சேர்ந்த மோகன் என்பவரது மகன் கார்த்திக்(24). இவர் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.
கார்த்திக்கின் நண்பர்களான ஐயப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார்(22), வினோத்குமார்(23) ஆகிய இருவரும் அதே கார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்கள் மூன்று பேரும் காற்றடிக்கும் இயந்திரத்தின் மூலமாக கார்களைச் சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது எதேச்சையாக கார்த்திக்கின் ஜீன்ஸ் பின்புறத்தில் கிழிந்திருந்ததைக் கண்ட விஜயும், வினோத்தும் விளையாட்டுத் தனமாக கார்த்திக்கின் ஆசனவாயில் காற்றடிக்கும் இயந்திரத்தை வைத்துள்ளனர்.
இதனால் கார்த்திக்கின் உடல் வீங்கியுள்ளது. உடனே கார்த்திக் மயங்கி கீழே விழுந்ததைக் கண்டு பதறிய நண்பர்களின் அலறல் கேட்டு விரைந்து வந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக கார்த்திக்கை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மகனுக்கு நடந்த கொடுமை குறித்து பொலிசில் கார்த்திக்கின் தந்தை மோகன் புகார் அளித்ததைத் தொடர்ந்து பொலிசார் வினோத் மற்றும் விஜயைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.