யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னணி : இளஞ்செழியன் விளக்கம்!!

315

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நல்லூரில் பகுதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவருக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாத போதும், அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நீதிபதி இளஞ்செழியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இது என்னை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம். வழமையாக யாழ்ப்பாணம் நல்லுர் கோவில் வீதியால் போக்குவரத்து மேற்கொள்வது வழமை என்று தெரிவித்த அவர் குறித்த கோவில் வீதியால் தான் சென்றதை அவதானித்தன் அடிப்படையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக நடைபெறும் பாரதூரமாக இடம்பெறும் வழக்குகள் அனைத்தையும் கையாளும் நீதிபதியாக இருப்பதால் அத்தகைய ஒரு சூழ்நிலை இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஏனெனில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் துப்பாக்கியை கையாண்ட விதம் மிகவும் ஒரு அனுபமுள்ள நபர் மேற்கொண்டதாக தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தன்னுடைய மெய்ப்பாதுகாவலுருக்கும் குறித்த நபருக்கும் இடையில் நல்லூர் பின்வீதி நாற்சந்தியில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதையும் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாக பிரதிப்பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளதாகவும், குறித்த விடயம் தன்னை பொறுத்தவரை நீதித்துறைக்குவிடுக்கப்பட்ட சவால் என்று கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக இடம்பெறுகின்ற வழக்குகள் யாவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகளாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாகவும் காரணம் தன்னுடைய பொலிஸ் சார்ஜனை யாருக்கும் தெரியாது என்றும் பொலிஸ் கான்ஸ்டபிளையும யாருக்கும் தெரியாது என்றும் ஆகவே அவர்களை இலக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும், நீதி அமைச்சும், நீதிச்சபை ஆணைக்குழுவும் தன்னுடைய நீதி அமைச்சரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.