வவுனியாவில் அகவை 80ஐ எட்டிய அறப்பணியாளர் கண்ணகி தேவராசாவின் அமுதவிழா!(படங்கள்)

1101

வவுனியாவில் இந்துமாமன்றம் மற்றும் மணிவாசகர் சபையின் தலைவர் வை.செ.தேவராசா அவர்களின் 80வது அகவை அமுதவிழா வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் இன்று 22-07 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

மேற்படி அமுதவிழா நாயகனான  வை.செ. தேவராசா அவர்கள்யாழ்  தீவுப்பகுதி  வேலணையை பிறப்பிடமாகவும்  தொழில் நிமித்தம் 1960 ஆம் ஆண்டு   வவுனியாவிற்கு  வருகைதந்து  தொடர்ச்சியாக வன்னி மண்ணில் சைவசமயத்தின் வளசியில் அக்கறை கொண்டவராய் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களின்  வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டதுடன்    ஆலயங்கள் தோறும்  திருவாசக முற்றோதல் நிகழ்வுகளை   நடத்தி வந்துள்ளமையும்    வவுனியாவில்  இந்துமாமன்றம் சுத்தானந்த இந்து இளைஞர்  மன்றம் என்பவற்றை உருவாக்குவதிலும்  முன்னின்று செயற்பட்டவராவார் …

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கலந்துகொண்டிருந்தார்.

சமாதான நீதிவானாகிய வை.செ.தேவராசா அவர்கள் திருவாசகச் செல்வர், வாதவூரரின் பாதசேகரன், திருமுறைச் செல்வர், இறைபணி வேந்தன்,ஈழத்துச் சிவத்தொண்டன், பெரியபுராண மாமனிதர், திருவாசக கலாநிதி, கலாபூசணம்,இறைபணிச் செம்மல் ஆகிய பட்டங்களை தனது வாழ்நாளில் பெற்றுள்ளதுடன் நிகழ்வில் முன்னிலை
அதிதியாக கலா கீர்த்தி உடுவை எஸ்.தில்லைநடராஜா கலந்துகொண்டிருந்தார்.
அமுதவிழா நிகழ்வில் ‘தேவஅமுதம்’ என்ற நினைவு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது.



நிகழ்வில பிரம்ம சிறி இ.பாலசந்திரக் குருக்கள், சிவசிறி நா.பிரபாகரக் குருக்கள், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராசா வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், வடக்குமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்தகொண்டிருந்தனர்.