காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற போராடிய யானைகள்!!(வீடியோ)

510


சிம்பாப்வேயில் காரில் அடிபட்டு உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்ற மற்ற யானைகள் போராடிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.சிம்பாப்வே நாட்டின் ஹவேஞ் தேசிய வன உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை 69 வயதான ஹெய்தி என்ற பெண் வெளியிட்டுள்ளார்.

பூங்காவில் தாம் வலம் வந்து கொண்டிருந்த போது, தமது வாகனத்தை வேகமாகக் கடந்து சென்ற கார் ஒன்று குட்டி யானை மீது மோதி விட்டு சென்றுவிட்டதாகவும், அப்போது அடிபட்ட குட்டி யானையைக் காப்பாற்ற தாய் யானையும், தந்தை யானையும் போராடியதாகவும், இதைக் கண்ட பிற யானைகளும் உதவியதாகவும் ஹெய்தி கூறியுள்ளார்.விபத்தில் சிக்கிய நபரைக் காப்பாற்ற நினைக்காமல் பெரும்பாலான மனிதர்கள் கடந்து போகும் இந்த காலத்தில், அடிபட்ட குட்டி யானையைக் காப்பாற்ற யானைகள் போராடிய காட்சி நெகிழ வைத்துள்ளது.