வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தாக்குதல் முயற்சி!!

505

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (24.07.2017) மாலை  5 மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது மதுபோதையில் தனியார் பேரூந்து நடத்துனர் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து இன்று தனியார் போக்குவரத்து சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதனையடுத்து தனியார் பேரூந்தின் நடத்துனர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச பேரூந்தில் ஏறியுள்ளார். பேரூந்தில் ஏறிய குறித்த நபர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இ.போ.ச பேரூந்தின் நடத்துனர் சென்று இவ்விடத்தில் மதுபானம் அருந்த வேண்டாமென தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த தனியார் பேரூந்து நடத்துனர் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் நடாத்த முயற்சித்ததாகவும் எனினும் அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் பிரயாணிகள் தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.