நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று!!

598

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இன்றைய தினம் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் கடந்த 15 வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமசந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.