வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியர் தின கொண்டாட்டத்தில் கைகலப்பு!!

666

studentவவுனியாவில் பிரபல பாடசாலையொன்றில் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவின்போது ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் போது மாணவர் குழுவொன்று மது அருந்திவிட்டு இடையூறு விளைவித்ததாகவும் இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியர் ஒருவர் கொடுத்த தண்டனையினாலேயே குறித்த மாணவர் தலையில் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவத்தை தொடர்ந்து பாடசாலை வளாகத்துக்குள் சிறிது நேரம் அசாதாரண சூழ்நிலை நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் மது அருந்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் 7 பேரையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குறித்த மாணவர்கள் மது அருந்தியது உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்றைய தினம் பாடசாலையின் முன்னால் பெற்றோர்கள் சிலர் கூடி சிறிய அளவிலான ஆர்ப்பாட்டமொன்று நடார்த்தியதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.