பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட 6 பேர் கைது!!

542

arrest1

பிரித்தானியாவில் இலங்கையர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் விசா அனுமதி காலம் முடிவடைந்த நிலையில் மேலதிக காலம் தங்கியிருந்துள்ளார்.
குறித்த நபர் கடையொன்றில் சட்டவிரோதமாக வேலை செய்து கொண்டிருந்தவேளை குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஏனையோர் இந்தியா மற்றும் பங்களாதேஸைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 6 பேரும் நாட்டுக்குத் திருப்பியனுப்புபடும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடிவரவு தடுப்பு அமுலாக்கல் குழுவின் உதவி இயக்குனர் கொலின் பேரிங்டொன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான எச்சரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக வியாபார நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் கைது செய்யப்படும் பட்சத்தில் 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் என அறிக்கப்பட்டிருந்தது.