
கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் இருவருமே எனது சிறந்த மாணவர்கள் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
20-20 போட்டியிலிருந்து சச்சின், டிராவிட் ஓய்வு பெற்று விட்டனர்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் டிராவிட்டும், சச்சினும் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்துள்ள அர்ப்பணிப்பு அளவிட முடியாதது.
இரண்டு பேருமே எனது சிறந்த மாணவர்கள் இருவரில் யார் பெரியவர்? யார் சிறியவர்? என்று வேறுபடுத்த முடியாது.
சச்சின் இடது கை என்றால் டிராவிட் வலது கை, இரு கைகளுமே நமக்கு வேண்டும்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய டிராவிட்டும், நான்காவதாக களமிறங்கிய சச்சினும் இந்திய அணியை பலமுறை சரிவில் இருந்து மீட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து பலமுறை 100 ஓட்டங்களுக்கு மேல் அளித்துள்ளனர். அது உலக சாதனையாகவும் உள்ளது.
டிராவிட்டிற்கு தலைமைத்துவ பண்பு சிறப்பாக உள்ளது. ஆட்ட நிர்ணயத்தில் சிக்கிய ராஜஸ்தான் அணியை மீண்டும் புத்துணர்வு பெறச் செய்து இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த பெருமை அவருக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார்.





