துடுப்பில் சிலிக்கன் டேப் : பீட்டர்சனுக்கு நஷ்டஈடு!!

347

pieterson

ஆஷஸ் தொடரில் துடுப்பின் நுனியில் சிலிக்கன் டேப் ஒட்டி விளையாடியதாக வெளியான செய்திக்கெதிரான வழக்கில் கெவின் பீட்டர்சனுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என வெற்றி பெற்றது.
இத்தொடரில் நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) செய்ய பயன்படுத்தப்படும் ஹொட் ஸ்பொட் தொழில்நுட்பத்தில் இருந்து தப்பிக்க இங்கிலாந்தின் பீட்டர்சன் உள்ளிட்ட சில வீரர்கள் தங்களது பேட்டின் நுனியில் சிலிக்கன் டேப் ஒட்டி விளையாடியதாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த சனல்9 உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்களது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டிருந்தன.

இதை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் பீட்டர்சன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதில் பீட்டர்சன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறுகையில், பீட்டர்சன் துடுப்பின் நுனியில் சிலிக்கன் டேப் ஒட்டி விளையாடியதாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றது என்றார்.

இதை ஏற்றுக் கொண்டு பீட்டர்சனிடம் மன்னிப்பு கேட்ட அந்த தனியார் நிறுவனம், சமூக வலைதளத்தில் இருந்து அந்த செய்தியை நீக்க ஒப்புக்கொண்டதோடு அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் ஒப்புக்கொண்டது.