நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்!!

522

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் ஏ விளம்பி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன், ஆரம்பமாவதை முன்னிட்டு ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.

ஆலயத்தின் நான்கு திசைகளிலும் உள்ள வீதிகளில் பக்தர்களின் நன்மை கருதி அலங்காரப் பந்தல்களும், தண்ணீர்ப் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆலயத்தின் முன்பக்கமாகக் கிழக்குத் திசையிலுள்ள பருத்தித் துறை வீதியில் இரு பிரமாண்டமான அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.



அத்துடன், ஆலயத்தின் தெற்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளிலும் விசேட அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்திற்குச் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளன. குறித்த வீதித் தடைகளில் யாழ்ப்பாணம் பொலிஸாருடன் இணைந்து யாழ். மாநகர சபையின் உத்தியோகஸ்தர்களும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துச் சாரதிகள் மாற்று வீதியில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நல்லைக்கந்தன் வருடாந்தப் பெருவிழாவையையொட்டி ஆலயத்தைச் சூழவுள்ள அனைத்து அன்னதான மடங்களும், மண்டபங்களும் வர்ணம் பூசப்பட்டுள்ளன.

மேலும், அந்த மடங்களிலும், மண்டபங்களிலும் ஆலய மஹோற்சவ காலங்களில் அன்னதானம்வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.