மனைவியை கொலை செய்து புதைத்த கணவன்: பொலிசாரிடம் சிக்கியது எப்படி?

538

 
தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவள்ளி. இவருக்கும் உடையார்பளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கனகவள்ளி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இந்நிலையில் கனகவள்ளி மற்றும் அருணுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கனகவள்ளி தனது குழந்தையுடன் சென்னையில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதன் பின் கனகவள்ளியை சமாதானப்படுத்தி அருண் தன் சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். ஊருக்கு அழைத்து வந்த பின்பு மனைவியை காணவில்லை என்று அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது எந்த வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால், நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக அருண் மற்றும் அவரது தந்தை தங்கமணி,மற்றும் டிரைவர் மணிகண்டன் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் கனகவள்ளியை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.

புதைத்த இடம் குறித்து அருண் தகவல் கூறியுள்ளார். பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, உடல் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் சென்றும் உடல் கிடைக்காததால், அருணை மீண்டும் விசாரித்துள்ளனர்.

அப்போது கொங்கனருரில் உள்ள முந்திரிகாட்டில் புதைத்ததாக கூறியுள்ளார். உடனடியாக அங்கு சென்ற பொலிசார் புதைத்த இடத்தை தோண்டி பார்த்த போது உடல் உறுப்புகளின் எலும்புகள், பெண்ணின் தலைமுடி, தாலி, போன்றவை கிடைத்துள்ளது. கிடைத்த உறுப்புகளை பொலிசார் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.