வவுனியாவில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்க வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் தண்ணீர்த் தாங்கிகளை கையளிக்கும் நிகழ்வுகள் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதனடிப்படையில் 24507 குடும்பங்களைச் சேர்ந்த 85771 உறுப்பினர்களுக்கு 3 தண்ணீர் கொண்டு செல்லும் உழவு இயந்திரம் 50 தண்ணீர் தாங்கிகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது.
தற்போது வவுனியாவில் ஏற்பட்டுள்ள வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் தண்ணீர் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்துக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.