வவுனியா சுகாதாரப் பணிமனையில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை : மக்கள் விசனம்!!

746

 
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த சில தினங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அகற்றப்பட்டாது குவிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பாக சுகாதாரப்பணிமனையில் வைத்திய அதிகாரி குப்பைகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரதான வாயிலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அப்பகுதியில் காணப்படுகின்றதுடன் நகரசபையினர் இதை அகற்றுவதில் தாமதித்து வருவதாகவும் அதன் காரணமாகவே குப்பைகள் தேங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகள், கடையோரங்களில் குப்பைகள், கழிவுகள் காணப்படின் அதற்கு தண்டப்பணம் அறவிடப்படும் சுகாதார தொண்டர்கள் தங்கள் பணிமனையிலே கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.