நடிகர், நடிகை இல்லாமல் விஜய் இயக்கும் புதிய படம்!!

397

vijay

விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய தலைவா படம் பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிகர், நடிகைகள் யாருமே கிடையாதாம்.

பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இவர் அஜித்தை வைத்து கிரீடம், விக்ரமை வைத்து தெய்வத் திருமகள், தாண்டவம் என முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் முன்னணி ஹீரோக்களும், ஹீரோயின்களும் இல்லாமலேயே படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் இயக்கும் அந்த புதிய படத்திற்கு சைவம் என்று பெயரிட்டிருக்கின்றனர்.

இப்படத்தில் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பேபி சாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். ஆர்யா ஏற்கெனவே விஜய் இயக்கத்தில் மதராசபட்டணம் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.