சூர்யா ஜோடியாக மாற்றான் படத்திலும் கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்திலும் நடித்துள்ளார் காஜல் அகர்வால். தற்போது மீண்டும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது.
காஜல் அகர்வால் அளித்த பேட்டியில்..
கேள்வி : ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் என்ன பாத்திரத்தில் வருகிறீர்கள்?
பதில் : எனக்கு இதில் நல்ல வேடம், சித்ரா தேவிபிரியா என்ற வேடத்தில் வருகிறேன். பிடிவாதம் இருக்கும். ஆனால் மனதில் எதுவும் கிடையாது. கடவுளால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசாக தன்னை நினைத்துக் கொண்டு வாழும் பெண். நல்ல மனம் உள்ள பாத்திரம்.
கே : கார்த்தியுடன் நடித்த அனுபவம்..
ப : ஏற்கனவே நான் மகான் அல்ல படத்தில் அவருடன் நடித்துள்ளேன். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். உதவிகள் செய்வார். இப்போது அவரது நடிப்பு திறமை முன்பை விட அதிகமாகி இருப்பதை அறிகிறேன். துடிப்பான ஆள். அவரது பலத்தை உணர்ந்தவர். இயக்குனர் சொன்னபடி சிறப்பாக நடித்தாலும் அவருக்கு திருப்தி வரும் வரை மீண்டும் மீண்டும் நடிப்பார்.
கே:– சூர்யா, கார்த்தியிடம் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்.
ப : கார்த்தி ஜொலியாக இருப்பார். சூர்யா அப்படியல்ல. வெளிப்படையாக பேசாத கூச்ச சுபாவம் உள்ளவர். இருவரும் ஒழுக்கமாகவும் பண்பாடு மீறாமலும் வளர்ந்து இருக்கிறார்கள்.
கே : இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?
ப : ஏற்கனவே ஒப்பந்தமான தமிழ் படங்களை முதலில் முடிக்க வேண்டும். விரைவில் இந்திப் படம் ஒன்றிலும் நடிப்பேன்.
கே : இன்னொரு நாயகியுடன் இணைந்து நடிப்பது பற்றி..
ப : ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இணைந்து நடிப்பது வரவேற்கத்தக்கது. நான் பாத்திரத்தை மட்டுமே பார்க்கிறேன். இன்னொரு நாயகியுடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. தெலுங்கு படங்களில் இதுபோல் சேர்ந்து நடிக்கிறார்கள்.
கே : விஜய்யுடன் நடிக்கும் ஜில்லா படத்தில் உங்கள் வேடம்..
ப : ஜில்லாவில் ஆக்சன் கரக்டரில் வருகிறேன். துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.