பிரித்தானியாவிலேயே ஆபத்தான வீடு இது தான்!!

952

 
லண்டனில் உள்ள வீடொன்று சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டனின் Leyton மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு வீடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வீடானது தார்பாய்கள், தகரம் போன்றவைகளால் மூடப்பட்டுள்ளது, ஆங்காங்கே ஏணிகளும் உள்ளன.

இதோடு வீட்டின் வெளிப்புறத்தில் தெரியும்படி பல பொருட்கள் அதிகளவில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளன. அந்த பக்கமாக செல்வோர் மீது அந்த கனமான பொருட்கள் விழலாம் என்ற சூழலே உள்ளது.

மக்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் இந்த வீட்டை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வீட்டு உரிமையாளர் அதை செய்யாமல் உள்ளார். கடந்த 9 வருடங்களாகவே வீடு இந்த நிலையில் தான் உள்ளது.

வீடு இருக்கும் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், இந்த ஆபத்தான வீட்டில் நபர் ஒருவர் வசிக்கிறார், இது அவரின் சொந்த வீடாகும்.

வீட்டின் மேல்பக்கத்தில் அதிகளவு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அதிகளவு எலி தொல்லை உள்ளது. வீட்டு உரிமையாளர் வீட்டின் உள்ளே ஏணி மூலமாக தான் செல்வார், பார்க்கவே திகிலாக இருக்கும் என கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் அரசு லொறி மூலம் இந்த வீடு சுத்தப்படுத்தப்பட்டு பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் சில வாரங்களில் பழையபடி உரிமையாளர் வீட்டை அசுத்தமாக மாற்றியுள்ளார்.

இந்த வீட்டின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ள Richard Brock (52) கூறுகையில், வீட்டின் மேலே அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் யார் மீதாவது விழுந்தால் நிச்சயம் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என எச்சரித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உறுப்பினர் Cllr Clyde Loakes கூறுகையில், பல முறை வீட்டை சரி செய்ய அரசு சார்பில் கூறியும் உரிமையாளர் அதை செய்யவில்லை.

எப்படியிருந்தாலும் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.