கட்டாருக்கு வளைகுடா நாடுகள் மீண்டும் வைக்கப் போகும் செக்!!

514

கட்டாருக்கு பொருளாதார ரீதியாக இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டாருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அதனுடனான ராஜதந்திர உறவை முறித்துக் கொண்டன.

மீண்டும் உறவை புதுப்பிக்க அந்நாடுகள் சில நிபந்தனைகளை கட்டாருக்கு விதித்தது, ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்க கட்டார் மறுத்து விட்டது.

இந்நிலையில் கட்டாருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்க வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நான்கு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டு கட்டார் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

இதில் கட்டாருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வகையில் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.