டெங்கு நோயாளர்களில் 30 வீதமானோர் சிறுவர்கள்!!

604

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் 30 வீதமானோர்கள் சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

5 முதல் 19 வயது வரையான சிறுவர்களே இந்தப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

டெங்கு நோயால் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 301 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.