வடகொரியா அமெரிக்கா முழுவதையும் தாக்க முடியும் : உளவுத்துறை அதிகாரிகள்!!

655

வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது.

அது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டது எனவும் ஜப்பான் கடற்கரை எல்லையில் நடத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜன் உன் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், இது உறுதியும் செய்யப்பட்டுள்ளதால் எந்த நேரத்தில் எந்த பகுதியையும் இங்கிருந்தே தாக்க முடியும் என்று மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இராணுவ வல்லுநர்கள், வட கொரியாவின் சமீபத்திய சோதனையான ஹாவசாங்-14 எனும் பெயர் கொண்ட இந்த ஏவுகணை 3,724.9 கி.மீற்றர் உயரமாக எழும்பி 998 கி.மீற்றர் தூரம் பயணித்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலில் விழுந்துள்ளது.

இந்த ஏவுகணை பல கட்டங்களைக் கடந்து சோதனையில் வெற்றி கண்டது என்பதால் ஆபத்தின் தன்மை அதிகம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வடகொரியாவால் அமெரிக்கா முழுவதையும் ஏவுகணைகளால தாக்க முடியும் என உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.