நல்லூரில் காவடி எடுத்த வெளிநாட்டுப் பெண்!!

852

ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாற்காவடியுடன் வருகை தந்தமை அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வெளிநாட்டுப் பெண் ஒருவர் இந்து மதத்தின் பெருமைகளை அறிந்து பாற்காவடி எடுத்துள்ள நிகழ்வு நல்லூர் கந்தனின் மகத்துவத்தினை உலகறியச் செய்துள்ளது.

அத்துடன் இவ் வெளிநாட்டு பெண்ணின் பக்தி, கூடியிருந்த பக்தர்களை வியக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் யாழில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யாழ் பெண்ணை திருமணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.