வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற நிலையில்!!

281

வவுனியா ஏ9 வீதியையும், காளிகோவில் வீதியையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள தாண்டிக்குளம் புகையிரக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடனே அதனூடாக பிரயாணிக்க வேண்டியுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் இப் புகையிரதக் கடவையானது கடந்த காலங்களில் புகையிரத கடவை அமைக்கப்பட்டதுடன் இதற்கான கடவை ஊழியரும் கடமையாற்றியிருந்தார். தற்போது இக்கடவை அகற்றப்பட்டு இங்கு ஒளி சமிக்கை மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

வவுனியா, தாண்டிக்குளம் சந்தியானது கடந்த காலத்தில் இருந்து தற்பொழுது வரை அதிக போக்குவரத்து நெரிசல் உடைய இடமாகும்.

கல்மடு, ஈச்சங்குளம், புதுக்குளம் போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களும் குருமன்காடு, தாண்டிக்குளம் போன்ற நகரை அண்டிய இடங்களில் உள்ளவர்களும் ஏ9 வீதியை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் இவ்வாறு செல்பவர்கள் இப் புகையிரதக் கடவையின் ஊடாகவே ஏ9 வீதியை அடைகின்றனர்.
அத்துடன் இக்கடவைக்கு மிக அண்மையில் பாடசாலை அமைந்துள்ளதுடன் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் இக்கடவையின் ஊடாகவே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காணப்படும் இக்கடவைக்கு, தானியங்கி கடவை அல்லது சாதாரண கடவையாவது அமைத்துத் தர வேண்டும் என இலங்கை புகையிரத திணைக்களத்தினை மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.