வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையில் அமைந்துள்ள பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு V3 அமைப்பினர் நேற்று (03.08.2017) வியாழக்கிழமை சுமார் 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
பாரதி முன்பள்ளி முகாமைத்துவ குழுவினர் V3 அமைப்பிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாப்பாட்டுப் பெட்டி ,தண்ணீர் போத்தல், சிறுவர்களுக்கான ஆங்கிலப்புத்தகங்கள், வரைதல் கொப்பி, வெளிக்களக்கொப்பி, இயற்கையான களி, பைல் கவர், சோக் கலர் பெட்டி, பென்சில் கலர் பெட்டி ,கம் போத்தல் என்பன கொண்ட பொதிகள் கொக்குவிலைச்சேர்ந்த லண்டன் வாழ் V3 அமைப்பின் சமூக ஆர்வலர் வி.விமல்ராஜால் அவரது பாரியார் திருமதி செல்வி விமல்ராஜின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்தார்.
பாரதி முன்பள்ளி ஆசிரியர் திருமதி ச.மேரி மெற்றில்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாஸன் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டார் .
சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற அதிபர் திரு குருகுலசிங்கம் மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி தி .கலைவாணி V3 அமைப்பின் வவுனியா உறுப்பினர்கள் கே.உதயகுமார் எஸ்.புருசோத்தமன், சமூக ஆர்வலர் த.தர்மராஜா ஆகியோருடன் பெற்றோர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.




















