வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் மின் கம்பத்துடன் மோதி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த மகேந்திரா வாகனம் ஒன்று இராசேந்திர குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தாக்கியதில் வாகனத்தில் பயணித்த வவுனியா பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த முகமட் வயது 30 என்ற நபர் நூதனமாக பலியாகியுள்ளார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை இன்று மதியம் வவுனியா கண்டி வீதியில் ஏற்பட்ட விபத்தில் நபரொருவர் பலியான சம்பவம் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.