வவுனியாவில் மின்கம்பத்துடன் மோதுண்ட வாகனம் : மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

630

 
வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் நேற்று (08.08 மாலை மின் கம்பத்துடன் மோதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த மகேந்திரா வாகனம் ஒன்று இராசேந்திர குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தாக்கியதில் வாகனத்தில் பயணித்த வவுனியா பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த முகமட் வயது 30 என்ற நபர் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.