வவுனியாவில் பாரவூர்தி தடம் புரண்டு விபத்து!!

1000

 
அம்பாறையில் இருந்து கிளிநொச்சி நோக்கி செங்கற்களுடன் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தி ஒன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அம்பாறையில் இருந்து செங்கற்களை ஏற்றிக் கொண்டு ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தி வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது குறித்த வாகனத்தின் வில்லுத்தகடு உடைந்தமை காரணமாக கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

எனினும் வாகன சாரதிக்கோ அதில் பயணித்த உதவியாளருக்கோ எந்தவித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.