பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டு ள்ள சட்டவிதிகள் கட்டாயமாக அமுல் படுத்தப்படும் என சுற்றாடல் பிரதி அமை ச்சர் அனுராதா ஜயரட்ன தெரிவித்தார்.
கண்டி ஈ.எல்.சேனாநாயக்கா சிறுவர் நூலகத்தில் இடம் பெற்ற நிகழ்வொன் றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக் கும் போதே அவர் இதனை குறிப்பிட் டார்.
சுற்றாடல் மற்றும் சூழலியல் பாதிப்புகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களை அறிவூட்டும் நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட இன்னும் பலர் கலந்துகொணடனர். பிரதி அமைச்சர் அனுராதா ஜயரட்ன தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
சுற்றாடலை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சகல முடிவுகளும் எச்சந்தர்ப்பத்திலேனும் பின்வாங்கும் நிலைக்கு உள்ளாகாது.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அரசுக்கு பல்வேறு தடைகள் உருவான போதும், பொலித்தீன் மற்றும் எஸ்பெஸ்ட்டோஸ் பாவனை தொடர்பாக எவ்வித தளர்வும் வழங்கப்படமாட்டாது.
கடந்த காலங்களில் சுற்றாடல் தொடர்பாக நாம் பல்வேறு முடிவுகளை எடுத் தோம். இருப்பினும் அவை அனைத்தின் பின்னாலும் பாரிய வர்த்தக முதலீட்டாளர்கள் இருந்தனர். அவர்கள் பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். இதனால் நாம் எடுத்த முடிவுகளை மீள் பரிசீலிக்க வேண்டி ஏற்பட்டது.
பொலித்தீன் பாவனை தொடர்பான தடைச்சட்டம் 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல்போனது. கட்டுகாஸ்தோட் டையில் கொஹாகொடை என்ற இடத் தில் குப்பைகளால் பாரிய குன்றுகள் உருவாகும் வரை எம்மால் பொலித்தீனைத் தடை செய்ய முடியாது போனது. எஸ்பெஸ்டோஸ் பாவனையிலும் இதே விதமான நிலையே உருவானது.
இப்படியான துறைகளில் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு ஏதும் சலுகை வழங்கி மேற்படி கைத்தொழிலை தடைசெய்ய அரசு திட் டமிட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று வழி களை காண்பிக்க உள்ளோம்.
தற்போது நாட்டில் சுற்றாடல் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் கடந்த காலத்திலும் இதே நிலைமை காணப்பட்டது.
தற்போது ஜனாதிபதியிடம் சுற்றாடல் தொடர்பான விடயம் கையளிக்கப்பட்டுள்ளதால் அவரால் மட்டும் அதனை மேற்கொள்ள முடியாது என்ற வகையில் பலதரப்பட்டவர்களையும் தெளிவுபடுத்திவருகின்றோம். அதில் ஒரு அங்கமாகவே எமது எதிர்கால தலைவர்கள் என்ற வகையில் பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். 2018 ஆகும் போது எஸ்பெஸ்டோஸ் தடையும் இதே வருடம் செப்டெம்பரில் பொலித்தீன் தடையும் அமுல்படுத்தப்படும். இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சகல சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படும் என்றார்.






