வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (14.08.2017) காலை 10 மணியளவில் சடலமொன்று வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலை பகுதியில் கடைமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அலேசு அருளப்பு ( வயது 58) என்பவர் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் அவரது கடமைகளை முடித்து விட்டு குறித்த விடுதியில் தங்கியுள்ளார்.
இன்று காலை குறித்த விடுதி அறைக்கு சக ஊழியர் ஒருவர் சென்ற சமயத்தில் நாட்காலியில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.