பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு!!(காணொளி)

516


 
பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது செய்து, கொண்டாடுவது வழமை.
இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராம மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் தயாரித்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.பத்திற்கும் மேற்பட்ட சமையற்காரர்களும் மக்களில் சிலரும் இணைந்து அதற்கு உதவி புரிந்தனர்.

அவர்கள் மிகப்பெரிய பாத்திரத்தில் 10,000 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயம் மற்றும் இறைச்சியைக் கலந்து ஆம்லெட் செய்து, அந்த ராட்சத ஆம்லெட்டை விழாவில் பங்கு பெற்ற அனைத்து மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.