கிளிநொச்சியில் சிறுமி நீண்டகாலமாக துஷ்பிரயோகம் : தாய் உட்பட மூவர் கைது!!

471

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பிரகாரம், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

இதுபற்றி குறித்த சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

11 வயதான சிறுமி ஒருவர் தனது தாயின் மூன்றாவது கணவரும் அவரின் நண்பரும் நீண்டகாலமாக தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவ்விருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சிறுமியின் தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலத்திற்கமைய , இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.