வவுனியா சாம்பல்தோட்டத்தில் கிணற்றிலிந்து ஐந்து பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!!

1005

 
 
வவுனியா சாம்பல் தோட்டத்தில் இன்று (20.08.2017) காலை 11.30 மணியளவில் ஐந்து பிள்ளைகளின் தாய் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தாயான தியாகராசா நகுலேஸ்வரி (வயது 46) என்பவர் இன்று கிணற்றிக்கு அருகே நின்றுள்ளார். பின்னர் தாயைக் காணவில்லை என அவரின் பிள்ளைகள் தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் சடலம் மீட்டெடுக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக குறித்த பெண்ணின் மகளிடம் வினாவிய போது, தாயார் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தார்.