வவுனியா – பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் – 2017

1126

ஈழ வள நாட்டின் நீர் வளமும், நில வளமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநகரின் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி, வழங்குகின்ற ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்க பெருமானுக்கு நிகழும் சர்வ மங்களங்களும் நிறைந்த ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 09ம் நாள் (25.08.2017) வெள்ளிக்கிழமை சதுர்த்தித் திதியும் அத்த நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

ஆவணி திங்கள் 17ம் நாள் (02.09.2017) சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்

03.09.2017 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக தினமாகிய திருவோண நட்சத்திரத்தில் நவோத்திர சஹஸ்ர சங்காபிஷேகமும்

தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்க வைபவமும் நடைபெறும்.

பக்த அடியார்கள் அனைவரும் வருகை தந்து நரசிங்கப் பெருமானின் திருவருள் பெற்றுய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.