வவுனியா வடக்கு வலய குறிசுட்டகுளம் அ.த.க. பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட இருக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது கடந்த 11.09.2017 திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, வவுனியா வடக்கு வலய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஞா. அகிலன் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.