வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபத்தினை புனரமைக்கும் இரானுவத்தினர்!

475

26 ஆண்டுகளாக வவுனியா மாவட்டத்தில் படையினர் வசமிருந்த வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரானுவத்தினரால் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பல மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் புனரமைக்கப்படாமல் பாதுகாப்பற்ற பகுதியாகவும், இளைஞர்கள் சட்டவிரோத செயற்பாடுகளும் இடமாகவும் காணப்பட்டது. தற்போது இரானுவத்தினர் குறித்த கலாச்சார மண்டபத்தினை புனரமைத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக இரானுவ பொறுப்பாளர் கருத்து தெரிவிக்கையில்

கடந்த 26வருடங்களாக இந்த கலாச்சார மண்டபம் இரானுவத்தினரின்  கட்டுப்பாட்டுக்குள் இருந்தது நாங்கள் இந்த கலாச்சார மண்டபத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வவுனியா பிரதேச செயலாளரிடம் கையளித்தோம் . எவ்வித புரனமைப்புமின்றி காணப்பட்டமையினால் வவுனியா இரானுவத்தினரால் மீள்புரனமைப்பு செய்து மீண்டும் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டை பேண இரானுவத்தினரால் மீள்புரனமைப்பு செய்து இவ் கலாச்சார மண்டபத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க இரானுவத்தினர் முன்வந்த இவ் செயற்பாடு வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் தெரிவித்தனர்.