விறகு வெட்டச் சென்ற பெண் பரிதாபமாக பலி!!

576

டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக ஸ்தலத்திலே​யே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (20.09) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மரணித்தவர் நான்கு பிள்ளைகளின் தாயான 56 வயதுடைய மயில்வாகனம் இந்திராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் டயகம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.