சித்ரவதை செய்த மனைவியை கொன்று புதைத்த கணவன் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

455

கனடாவில் சித்ரவதை செய்து வந்த மனைவியை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கல்கேரி நகரில் Allan Shyback மற்றும் Lisa Mitchell என்ற தம்பதி இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கணவனை மனைவி தொடர்ந்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2012ம் ஆண்டு இருவருக்கு வாக்குவாதம் அதிகரித்து அடிதடியில் முடிந்துள்ளது. அப்போது, மனைவி சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து கணவனை குத்த முயன்றுள்ளார்.

உயிரை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இருந்த கணவன் மனைவியை தடுத்து நிறுத்தி அவரது கழுத்தை நெறித்துள்ளார்.

இச்சம்பவத்தில் மூச்சு திணறிய மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்து விட்டதை எண்ணி கணவன் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வேறு வழி இல்லாத காரணத்தினால் மனைவியின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டியுள்ளார். பின்னர், வீட்டின் நிலவறைக்குள் குழியை தோண்டி புதைத்து சிமெண்ட் போட்டு பூசியுள்ளார்.

அம்மாவை காணாமல் தவித்த குழந்தைகளிடம் பல காரணங்களை கூறி தந்தை மறைத்து வந்துள்ளார்.

தாயார் காணாமல் போனது தொடர்பாக 2013ம் ஆண்டு பொலிசார் ரகசிய விசாரணையை தொடங்கியபோது தந்தை பிடிப்பட்டு அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.

தற்காப்பிற்காக கொலை செய்தாலும் கூட அதனை மறைத்து குழந்தைகள் உள்ள வீட்டிலேயே புதைத்து வைத்தது ஒரு திட்டமிட்ட குற்றமாகும்.

எனவே, குற்றவாளியான தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

எனினும், குற்றவாளி ஏற்கனவே 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து விட்டதால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.