தென்னிலங்கையில் மீண்டும் தனது சாதனையை புதுப்பித்த யாழ். மங்கை!!

692

வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், தேசிய ரீதியாக ஏற்படுத்திய தனது சாதனையை மீண்டும் புதுப்பித்துள்ளார். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாதனை படைத்துவரும் அனித்தா இன்று மீண்டும் மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார்.

அனித்தா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் ஸ்ரீலங்கா சாதனையை மீண்டும் புதுப்பித்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மாத்தறை – கொடவில மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய 43வது தேசிய விளையாட்டு விழாவில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அதற்கமைய அனிதா 3.48 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.