அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப் போகும் வடகொரியா: அடுத்த சோதனை எங்கு தெரியுமா?

320

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா தனது அடுத்த அணுகுண்டு பரிசோதனையை பசிபிக் பெருங்கடலில் நடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாடுகளை தனது அணுஆயுத சோதனைகளால் மிரட்டி வரும் வடகொரியாவை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கு வடகொரிய அதிபர் கிம் ஜங் உன், அமெரிக்கா மன சோர்வு அடைந்துவிட்டது. அதன் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப், வடகொரியா அதிபர் ஒரு பைத்தியகாரன், அவரது செயல்பாடு மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இது தான் அந்த நாட்டில் நடக்கபோகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வடகொரியா அதிபர் அமெரிக்காவின் இந்த பேச்சுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வடகொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Ri Yong-ho செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிபர் கிம் ஜங் உன் சோதனைகளை அதிகாமாக்குங்கள் என்றும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த சோதனை இருக்க வேண்டும் என்று கூறியதாகவும், நான் நினைக்கிறேன் அது ஹைட்ரஜன் அணு குண்டு சோதனையாகத் தான் இருக்கும், பசிபிக் பெருங்கடலில் நடத்தப்படலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இது உறுதியான தகவல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.