15 வயது சிறுமி துஷ்பிரயோகம் : விடுமுறையை கழிக்க வந்த இராணுவ சிப்பாய் கைது!!

531

புத்தளம் – வணதவில்லு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் மிஹிந்தலை இராணுவ முகாமில் இருக்கும் 40 வயதுடைய சிப்பாயை வணதவில்லு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்த குறித்த நபர், பக்கத்து வீட்டில் இருக்கும் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி உள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.