வீதியில் காய்கறி விற்ற சிறுவனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்!!

529

பொருளாதார சிக்கலால் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பள்ளியில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் வறுமை அதிகளவில் தலைவிரித்து ஆடுவதால் அந்நாட்டு சிறுவர்கள் பலர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு செல்கிறார்கள்.

இந்நிலையில் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் சாலையில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும் அனைத்து காய்கறிகளையும் தான் வாங்கி கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, குறித்த சிறுவனை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்ப தான் நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.