பாம்புகளின் காதலனுக்கு பாம்பால் வந்த நிலை : சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!!

667

 
பிரித்தானியாவில் செல்லமாக பாம்புகளை வளர்த்து வந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Hampshire பகுதியை சேர்ந்தவர் Dan Brandon(வயது 31). இவருக்கு பாம்புகள் என்றால் அலாதி பிரியம், தன்னுடைய வீட்டில் மலைப்பாம்புகளை வளர்த்து வந்தார். அவைகளுடன் ஜாலியாக விளையாடும் Dan Brandon, பேஸ்புக் பக்கத்திலும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய வீட்டில் Dan Brandon படுகாயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு அருகே பாம்பு ஒன்றும் இருந்துள்ளது, தனக்கு பசி எடுத்த போது உணவுக்காக Dan Brandon-வை கொத்தி கொன்றிருக்குமா என்ற நோக்கில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே தெளிவான முடிவு கிடைக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.