நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!!

1070

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.