வடமாகாண சபை புளொட் உறுப்பினர்கள் கட்சி செயலாளர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்..!

265


PLOTEதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.இந்த வகையில் புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.