மட்டக்களப்பில் கைக்குண்டு வெடித்து சிறுவன் படுகாயம்!!

607

bombமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கைக்குண்டு வெடித்ததன் காரணமாக சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 03 மணியளவில் திருப்பெருந்துறை மாதா தேவாலயத்துக்கு முன்பாகவுள்ள பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரம் கல்வி பயிலும் தி.மதுஸன்(10) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதி கைவிடப்பட்ட பகுதியாகவும் காடுகள் கொண்டதாகவும் காணப்படுகின்ற நிலையில் அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதியில் துருப்பிடித்த நிலையில் கிடந்த பொருளை எடுத்து கிணற்று கட்டில் அடித்தபோது அது வெடித்துள்ளது.

இதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்னரும் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.