நெருப்பில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பர்தாவைக் கழற்றி காப்பாற்றிய பெண்!!

513

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீப்பற்றியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சாரதியை பெண் ஒருவர் தனது பர்தாவை கழற்றி காப்பாற்றியுள்ளார்.

அமீரகத்தில் ஆஜமன் நகரில் உள்ள வீதியில் வாகனங்கள் திடீரென்று மோதின. இதனால் அதில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த சாரதி உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே ஜவாஹெர் என்ற இளம் பெண் தன் பெண் நண்பிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனர் உயிருக்கு போராடியதை கண்டுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக காரை நிறுத்திவிட்டு தன் பர்தாவை கழற்றியதோடு, தோழியின் பர்தாவையும் கழற்றித், ஓட்டுனரை கீழேத் தள்ளி பர்தாவை வைத்து தீயை அணைத்துள்ளார்.

இதை அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மீட்பு படையினர் தீயில் சிக்கியவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தீயில் சிக்கிய ஓட்டுனரின் பெயர் சிங் என்றும் அவருக்கு உடலில் 50 சதவீத அளவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜவாஹெர் மட்டும் சமயோசிதமாக பர்தாவைக் கழற்றித் தீயை அணைக்கவில்லை என்றால், தீக்காய சதவிகிதம் அதிகரித்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜவாஹெர் மற்றும் அவரின் தோழியின் துணிச்சலைப் பாராட்டி சமூகவலைத் தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.