வீதி விபத்தில் சிக்கிய நடிகை சிந்து மேனனின் தாய் வலியால் துடித்து கொண்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் சண்டையிட்ட ஓட்டுனர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமுத்திரம், ஈரம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சிந்து மேனன். பெங்களூரில் சிந்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிந்துவின் தாய் ஸ்ரீதேவி அருகில் உள்ள இடத்துக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
சிக்னலில் முச்சக்கரவண்டி நின்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கால் டக்சி ஒன்று முச்சக்கர வண்டியில் மோதியது.
இதில் ஸ்ரீதேவியின் மார்பில் அடிப்பட்டு வலியால் துடித்தார். அதை பொருட்படுத்தாத கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர்.
இதையடுத்து, தனது மகனுக்கு தொலைபேசி அழைப்பில் ஸ்ரீதேவி தனது நிலையை தெரிவித்துள்ளார். பின்னர் ஒருமணி நேரத்துக்கு பின்னரே ஸ்ரீதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






