தம்பியை சித்திரவதை செய்த அண்ணன் கைது!!

582

12 வயதான சிறுவனை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுவனின் மூத்த சகோதரன் மற்றும் அவரது மனைவியை கலஹா பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

சிறுவன் சத்தமிட்டு அழுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளான சிறுவனை மீட்டுள்ளனர்.

சிறுவன் வீசு கத்தியாலும், பொல்லுகளாலும் தாக்கப்பட்டுள்ளதுடன், நடக்க முடியாதபடி மர கட்டைகள் சிறுவனின் கால்களில் போடப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராம சேவகரின் அலுவலகத்திற்கு பின் புறம் உள்ள வீட்டில் ஒரு மூலையில் இருந்த நிலையில் சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுவனின் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 24 வயதான சகோதரனும் அவரது மனைவியும் இந்த சிறுவனை சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எப்படி இருந்த போதிலும் தம்மை விட பலத்திலும், வயதிலும் குறைந்த சிறுவர்களை துன்புறுத்துவதும், சித்திரவதை செய்வதும் மிகவும் கொடுமையானது என சிறுவர் உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.